மஹேலவின் பிறந்த நாள் சிறப்புக் கண்ணோட்டம்

610

இலங்கை கிரிக்கட் அணி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன 1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில் பிறந்தார்.  வலதுகைத் துடுப்பாட்ட வீரரான மஹேல 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 149 டெஸ்ட் போட்டிகள், 448 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 55 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மஹேல ஜயவர்தனவின் வாழ்க்கைக் குறிப்பு

முழுப் பெயர் : டெனகமகெ ப்ரபொத் மஹேல டி சில்வா ஜயவர்தன
பிறப்பு : 1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில்
தற்போதைய வயது : 39
கல்வி : கொழும்பு நாலந்தா கல்லூரி
விளையாடும் பாணி : துடுப்பாட்ட வீரர்
துடுப்பாட்ட நடை : வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை : வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தந்தையின் பெயர் : செனரத் ஜயவர்தன
தாயின் பெயர் : சுனிலா ஜயவர்தன
சகோதரரின் பெயர் : திஷால் ஜயவர்தன (மூளையில் கட்டி காரணமாக இறந்து விட்டார்)
திருமணம் : 2005ஆம் ஆண்டு
மனைவியின் பெயர் : கிறிஸ்டினா மல்லிகா சிறிசேன
குழந்தைகள் : மகள் – சன்சா (பிறப்பு 2013ஆம் ஆண்டு டிசம்பர் 03)
விளையாடிய அணிகள் : இலங்கை, அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், ஆசிய XI, டில்லி டேர்டெவில்ஸ், ஜமைக்கா தலவஹஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, சிங்கலிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், டிரினிடாட் & டொபாகோ ரெட் ஸ்டீல், வயம்ப

டெஸ்ட் போட்டிகளில் மஹேல

Mahela Jayawardene

மஹேல தனது முதல் டெஸ்ட் போட்டியில் 1997ஆம் ஆண்டு இந்தியா அணியுடனான போட்டியில் அறிமுகமானார். அதுபோன்று தனது இறுதி டெஸ்ட் போட்டியில் 2014ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார். இலங்கை அணிக்காக 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மஹேல 252 இனிங்ஸில் 11,814 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது துடுப்பாட்ட சராசரி – 49.84.
அதிக ஓட்டம் – 374 தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக
100/50 – 34/50
4s/6s – 1387/61
பிடியெடுப்புகள் – 205

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மஹேல

Mahela Jayawardene

மஹேல தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 1998ஆம் ஆண்டு சிம்பாப்வே அணியுடனான போட்டியில் அறிமுகமானார். அதுபோன்று தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 2015ஆம் ஆண்டு .சி.சி உலகக் கிண்ணப் போட்டியின் போது தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். இலங்கை அணிக்காக 448 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய மஹேல 418 இனிங்ஸில் 12,650  ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது துடுப்பாட்ட சராசரி – 33.37
அதிக ஓட்டம் – 144 இங்கிலாந்து அணிக்கு எதிராக
100/50 – 19/77
4s/6s – 1119/76
பிடியெடுப்புகள் – 218

டி20 சர்வதேசப் போட்டிகளில் மஹேல

Mahela Jayawardene

தனது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அறிமுகமானார். அதுபோன்று தனது இறுதி டி20 சர்வதேச  போட்டியில் 2014ஆம் ஆண்டு .சி.சி டி20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். இலங்கை அணிக்காக 55 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய மஹேல 55 இனிங்ஸில் 1493 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவரது துடுப்பாட்ட சராசரி – 31.76
அதிக ஓட்டம் – 100 சிம்பாப்வே அணிக்கு எதிராக
100/50 – 01/09
4s/6s – 173/33
பிடியெடுப்புகள் – 17

மஹேல விளையாடிய போட்டிகளில் இலங்கை அணி

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில்
விளையாடிய போட்டிகள் – 448
வெற்றி – 241
தோல்வி – 186

டெஸ்ட் போட்டிகளில்
விளையாடிய போட்டிகள் – 149
வெற்றி – 58
தோல்வி – 46
வெற்றி தோல்வியின்றி முடிவு – 45

டி20 சர்வதேசப் போட்டிகளில்
விளையாடிய போட்டிகள் – 55
வெற்றி – 37
தோல்வி – 17

மஹேலவின் தலைமையின் கீழ் இலங்கை அணி

டெஸ்ட் போட்டிகளில் – (2005/06 – 2012/13)
தலைமை வகித்த போட்டிகள் – 38
வெற்றி – 18
தோல்வி – 12
வெற்றி தோல்வியின்றி முடிவு – 08

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (2004-2013)
தலைமை வகித்த போட்டிகள் – 126
வெற்றி – 68
தோல்வி – 49

டி20 சர்வதேசப் போட்டிகளில் (2006–2008, 2012)
தலைமை வகித்த போட்டிகள் – 19
வெற்றி – 12
தோல்வி – 06

கிரிக்கட் உலகில் மஹேலவின் சாதனைகள்

டெஸ்ட் போட்டிகளில்

Mahela Jayawardene

எந்த விக்கட்டிற்குமான இணைப்பாட்டங்களில் 2006ஆம் ஆண்டு மஹேல மற்றும் சங்கா ஆகியோர் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 3ஆவது விக்கட்டுக்காக 624 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

3ஆவது விக்கட்டுக்காக அதிக இணைப்பாட்ட ஓட்டங்கள்மஹேல மற்றும் சங்கா (5890 ஓட்டங்கள்)

ஒரு மைதானத்தில் அதிக ஓட்டங்களைப் பெற்ற பெருமைஎஸ்.எஸ்.சி மைதானத்தில்  2921 ஓட்டங்கள்

2ஆவது அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் – 205 பிடியெடுப்புகள்

இலங்கை டெஸ்ட் வரலாற்றில் தனி ஒருவரால் பெறப்பட்ட அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் – 374 ஓட்டங்கள்

ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில்

Mahela Jayawardene

அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் – 218 பிடியெடுப்புகள்

அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கையர் – 448 போட்டிகள்

டி20 போட்டிகளில் இலங்கை அணி சார்பாக சதம் அடித்த முதல் வீரர்

உலகக் கிண்ண வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சதம் அடித்த ஒரே ஒருவீரர்.