மேற்கிந்திய மற்றும் சிம்பாப்வே தொடருக்கான இந்தியக் குழாம்

688
Dhoni & Kohli

ஐ.பி.எல் தொடரில் இன்னும் 4 போட்டிகளே எஞ்சியுள்ளன. அதன் பின் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், சிம்பாப்வே அணிக்கெதிராக தலா 3 போட்டிகளைக் கொண்ட  ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கும் விளையாடவுள்ள  இந்திய குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜாங்வே, கிரீமர் ஆகியோருக்கு சிம்பாப்வே அணியில் மீண்டும் இடம்

சிம்பாப்வே தொடர் ஜூன் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடர் ஜூலைஆகஸ்ட் மாதங்களிலும் இடம்பெறவுள்ளன. சிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில், முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அனுபவம் குறைந்த அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், டெஸ்ட் தொடருக்கான குழாமில் வழக்கமான அனுபவமிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளதோடு அக்குழாமில் உப தலைவராக அஜின்கியா ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 குழாம்:

மகேந்திரசிங் டோணி (தலைவர்), லோகேஷ் ராகுல், பயாஸ் பஸல், மனிஷ் பாண்டே, கருண் நாயர், அம்பத்தி ராயுடு, றிஷி தவான், அக்ஸர் பட்டேல், ஜெயந்த் யாதவ், தவால் குல்கர்ணி, ஜஸ்பிறிட் பும்ரா, பரிந்தர் ஸ்ரான், மந்தீப் சிங், கேதார் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், யுஸ்வேந்திர சஹால்.

டெஸ்ட் குழாம்:

விராத் கோலி (தலைவர்), அஜின்கியா ரஹானே, முரளி விஜய், ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், செற்றேஸ்வர் புஜாரா, றோகித் ஷர்மா, ரிதிமான் சஹா, இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஸ்டுவேர்ட் பினி.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்