நேற்று ரய்ப்பூரில் நடைபெற்ற 56ஆவது ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி தலைவர்  விராத் கொஹ்லி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி கொக் மற்றும் பண்ட் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள். பண்ட் 1 ஓட்டங்களை எடுத்த நிலையில் அரவிந்த் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் மெதுவாக இருந்தது. இதனால் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஓட்டங்களைச் சேர்க்க சிரமப்பட்டனர். பெங்களூர் அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கட்டுக்களை வீழ்த்தினார்கள்.

மோசமான துடுப்பாட்டமே அவமானகரமான தோல்விக்குக் காரணம் – மெதிவ்ஸ்

இந்தக் கடினமான ஆடுகளத்தில் டி கொக் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இறுதியில் கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில்27 ஓட்டங்களைச் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் சஹல் 3 விக்கட்டுகளையும், கெய்ல் இரண்டு  விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 139 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான விராத் கொஹ்லி மற்றும் க்றிஸ் கெய்ல் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் விராத் கொஹ்லி மிகவும் கவனமாக விளையாடினார். ஆட்டத்தின் 2ஆவது ஓவரை மொரிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கெய்ல் கிளீன் போல்டானார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 6 ஓட்டங்களோடு ஏமாற்றம் அளித்தார்.

அப்போது பெங்களூர் அணி 2.4 ஓவர்களில்  17 ஓட்டங்களைப் பெற்று முக்கிய இரண்டு விக்கட்டுகளை இழந்தது. அடுத்து கொஹ்லியுடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் கொஹ்லி  நிதானமாக விளையாட மறுமுனையில் ராகுல் அதிரடியாக விளையாடினார். அவர் 23 பந்துகளில்  4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ஓட்டங்களைக் குவித்து பிராத்வைட்வீசிய பந்துவீச்சில் எதிர்பாராத விதமாக போல்டானார்.

அப்போது பெங்களூர் அணி 10.1 ஓவரில் 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அடுத்து வந்த வொட்சன் 14 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். ஒருபுறம் மேலும் இரண்டு விக்கட்டுகள் வீழ்ந்தாலும் கொஹ்லி சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்தார். அதன்பின் பெங்களூர் அணிக்கு போட்டி எளிதாகிவிட்டது. கடைசி 3 ஓவரில் 13 ஓட்டங்கள்தான் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை சஹீர் கான் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 12 ஓட்டங்களைச் சேர்த்தது.

இதனால் இரண்டு ஓவரில் 1 ஓட்டம்  மட்டுமே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரின் முதல் பந்தில் விராத் கொஹ்லி அந்த ஓட்டத்தை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 18.1 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை எடுத்து 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி பிளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடம் பெற்றதால் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியுடன் முதலாவது தகுதிகான் போட்டியில் 24ஆம் திகதி மோதுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்