ஜாங்வே, கிரீமர் ஆகியோருக்கு சிம்பாப்வே அணியில் மீண்டும் இடம்

221

ஐ.பி.எல். தொடர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. அந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி சிம்பாப்வே செல்கிறது.

அங்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. ஒருநாள் தொடர் 11ஆம் திகதியும், டி20 தொடர் 18ஆம் திகதியும் தொடங்குகிறது. இதற்கான சிம்பாப்வே அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

சிம்பாப்வே அணியில் காயத்தால் டி20 உலகக் கிண்ணத்தில் இடம்பெறாமல் இருந்த ஜாங்வே, கிரீமர் ஆகியோர் இந்த தொடரில் இடம்பெற இருக்கிறார்கள்.

உலகக் கிண்ண தொடருக்கான  பயிற்சி ஆட்டத்தில் சிம்பாப்வே  அணி விளையாடும்போது லூக் ஜாங்வேவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. காயம் குணமடைய மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நான்கு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளதால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இடம் பிடிக்க இருக்கிறார்.

சுழற்பந்து வீச்சாளர் கிரேம் கிரீமர் ஷார்ஜாவில் பயிற்சி மேற்கொண்டபோது இடதுகையில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவரது காயம் முழுவதும் குணம் அடைந்துவிட்டது. இதனால் அவரும் இந்த தொடரில் இடம்பெற இருக்கிறார். இவர்களுடன் நெவில் மட்சிவாவும் இந்திய தொடரில் இடம்பெறுகிறார்.

இந்திய – சிம்பாப்வே போட்டித் தொடர் காலநேர அட்டவணை

1ஆவது ஒருநாள் போட்டி – ஜூன் 11
2ஆவது ஒருநாள் போட்டி – ஜூன் 13
3ஆவது ஒருநாள் போட்டி – ஜூன் 15

1ஆவது டி20 போட்டி – ஜூன் 18
2ஆவது டி20 போட்டி – ஜூன் 20
3ஆவது டி20 போட்டி – ஜூன் 22

எல்லா போட்டிகளும் ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்