ஐ.பி.எல் வரலாற்றில் அஷ்வின் சாதனை

820
Rising Pune Supergiants,

இந்தியக் கிரிக்கட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐ.பி.எல். கிரிக்கட் தொடரில்  100 விக்கட்டுக்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

9ஆவது ஐ.பி.எல். போட்டித் தொடரில் புனே அணி புதிதாக இடம்பெற்றிருந்தது. இந்த அணி தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் அபாரமாகப் பந்து வீசி 4 விக்கட்டுக்களை  வீழ்த்தினார்.

கடைசிப் பந்தில் சிக்ஸ் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார் டோனி

இதன்மூலம் அவர் ஐ.பி.எல். போட்டிகளில் 100 விக்கட்டுக்கள் வீழ்த்தி சாதனைபடைத்துள்ளார். ஐ.பி.எல். தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டு அஷ்வின் இடம்பெறவில்லை. அதன்பின் 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

அஷ்வின்  ஐ.பி.எல். வரலாற்றில் 2009ஆம் ஆண்டு 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், 2010ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 13விக்கெட்டுகளையும், 2011ஆம் ஆண்டு  16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும், 2012ஆம் 19 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், 2013ஆம்  18 போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும், 2014ஆம் 16 போட்டிகளில்  16 விக்கெட்டுகளையும், 2015ஆம் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும், தற்போது இந்த வருடம் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்