சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் எஞ்சலொ மெதிவ்ஸ் முதலில் இங்கிலாந்து அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

போட்டியின் சுருக்கும்

இங்கிலாந்து அணி 1ஆவது இனிங்ஸில் 297/10
பெயார்ஸ்டோ 140
அலெக்ஸ் ஹேல்ஸ் 86
தசுன் ஷானக 46/3
துஸ்மந்த சமீர 64/3
ரங்கன ஹேரத் 25/2

இலங்கை 1ஆவது இனிங்ஸில் 91/10
எஞ்சலொ மெதிவ்ஸ் 34
லஹிறு திரிமன்ன 22
டினேஷ் சந்திமல் 22
ஜேம்ஸ் எண்டர்சன் 16/5
ஸ்டுவர்ட் ப்ரொட் 11/4

206 ஓட்டங்கள் முதல் இனிங்ஸில் இலங்கை அணி பின்னிலையில் இருந்தமையால் இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் இலங்கை அணியை “Follow on ” முறையில் இரண்டாவது இனிங்ஸைத் தொடரக் கூறினார்.

இலங்கை 2ஆவது இனிங்ஸில் 119/10
குசல் மென்டிஸ் 53
லஹிறு திரிமன்ன 16
கவ்ஷால் சில்வா 14
ஜேம்ஸ் எண்டர்சன் 29/5
ஸ்டீவன் பின் 26/3

இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும்  88 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணி சார்பாக சதம் அடித்த ஜொனி பெயார்ஸ்டோ தெரிவானார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

Full Scorecard