2ஆவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்

317
Anthony Stokes

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பிக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகவுள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக ஹெடிங்லி மைதானத்தில் இடம்பெற்ற 1ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸ் பந்துவீசி இருந்தார். அப்போது அவரது முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதன் பின் அவர் மைதானத்தை விட்டு வெளியேறி இருந்தார். பின்னர் நேரம் கழித்து வந்து மீண்டும் பந்துவீசும் போது அது அவருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில்  சாதனை படைத்தார் அஷ்வின்

ஸ்டோக்ஸ்ஸின் முழங்கால் காயம் தொடர்பாக இங்கிலாந்து அணித் தலைவர் எலஸ்டயர் குக் கருத்துத் தெரிவிக்கும் போது "அவரை பார்க்கும் போது உடல் நிலை நன்றாக இருக்கவில்லை, அவருக்கு நாளை ஒரு ஸ்கேன் செய்யப்படவுள்ளது. அவருக்குப் பதிலாக ஒரு வீரரை குழாமில் இணைக்க வேண்டும், அவரைக் குழாமில் இணைத்தால் அங்கு ஒரு ஆபத்து உள்ளது. எமக்குத் தெரியாது. அவரது முழங்காலில் உபாதை உள்ளது என 100% வீதம் கூறமுடியாது." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கட் தெரிவாளர்கள் குழு இது தொடர்பாக கலந்துரையாடவுள்ளது. கிறிஸ் வோக்ஸ் இவருக்குப் பதிலாக குழாமில் சேர்க்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. பென் ஸ்டோக்ஸ் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் 12 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் பந்துவீச்சில் இலங்கை அணியின் 1ஆவது இனிங்ஸில் உபதலைவர் தினேஷ் சந்திமாலின் முக்கிய விக்கட்டை வீழ்த்தியிருந்தார் என்பது முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்