மோசமான துடுப்பாட்டமே அவமானகரமான தோல்விக்குக் காரணம் – மெதிவ்ஸ்

2337
Angelo Mathews

3 டெஸ்ட், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியைக் கொண்ட தொடரில் விளையாட இலங்கை அணி இம்மாதம் 4ஆம் திகதி இங்கிலாந்து சென்று இருந்தது.

இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி 3நாட்களிலேயே போட்டி முடிவுக்கு வந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி ஒருஇனிங்ஸ் மற்றும்  88 ஓட்டங்களால் இலகுவான  வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இனிங்ஸில் 297 ஓட்டங்களைப் பெற்றது. பின் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 91ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் இலங்கை அணி 206 ஓட்டங்கள் முதல் இனிங்ஸில்பின்னிலையில் இருந்தமையால் இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக்இலங்கை அணியை “Follow on” முறையில் இரண்டாவது இனிங்ஸைத் தொடரக்கூறினார். அதைத் தொடர்ந்த இலங்கை அணி இரண்டாவது இனிங்ஸில் 119ஓட்டங்களுக்கு சுருண்டு இனிங்ஸ் தோல்வி பெற்றது.

இங்கிலாந்து அணிக்கு இனிங்ஸ் வெற்றி

இந்தத் தோல்வியின் பின் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின்தலைவர் எஞ்சலொ மெதிவ்ஸ் “மிகவும் சங்கடமாகவுள்ளது, மோசமானதுடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம், நாம் ஒழுங்காக பந்துகளுக்குமுகங்கொடுக்கவில்லை, அவர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள், சரியான இடத்தில் பந்துகளை வீசினார்கள், நாம் பந்துகளுக்கு மட்டையைப் போட்டு பிடியெடுப்புகளைக் கொடுத்தோம். நாம் சூழ்நிலைகளை அறிந்துஒழுங்காகவும் உறுதியாக நிலைத்து விளையாடவேண்டும், எண்டர்சன் அவரது பந்துவீச்சு தரத்தைவெளிப்படுத்தினார். அவரோடு ப்ரொடும் அற்புதமாகப் பந்து வீசினார், ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் முன் நின்று பொறுப்பை எடுத்து ஓட்டங்களைப் பெறவேண்டும்.ஆனால் நாம் அதை இரண்டு இனிங்ஸிலும் செய்யத் தவறினோம். இது தான் நமது தோல்விக்கு வெளிப்படையான காரணமாகும்.

இலங்கை அணி முதல் நாளில் ஆரம்பத்திலேயே 83 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளைகைப்பற்றி போட்டியைக் கட்டுப்படுத்தியது. ஆனால் பெயார்ஸ்டோ மற்றும் ஹேல்சின்சிறந்த இணைப்பாட்டம் இங்கிலாந்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டு சென்றது.நாம் அவர்கள் இருவரின் இணைப்பாட்டதில் குறைந்தது 3 பிடியெடுப்புகளைத் தவற விட்டோம். நாம் இங்கு வர முன் கண்டியில் பயிற்சிகளில் ஈடுபட்டோம். ஆனால்ஹெடிங்லி மைதானத்தின் சூழ்நிலைகள் நமக்கு மிகவும் கடினமாக இருந்தது. எதுஎவ்வாறாயினும் எதிர்வரும் போட்டிகளில் இந்தப் போட்டியில் விட்ட பிழைகளை சரிசெய்து விளையாடுவோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்