அவுஸ்திரேலிய அணிக்கு திரும்புகிறார் ஸ்டார்க்

1977
Mitchell Starc

காயம் காரணமாக நடந்த 7 மாதங்களாக அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறாமல் இருந்த மிட்சல் ஸ்டார்க் குணமடைந்து விட்டார். இதனால் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் மிட்செல் ஸ்டார்க். தன்னுடைய நேர்த்தியான பந்து வீச்சால் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தக்கூடியவர். இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சத்திர சிகிச்சை செய்து கொண்டதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

தற்போது காயம் குணமடைந்து விட்டதால் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கிறார். அவுஸ்திரேலிய அணி விரைவில் மேற்கிந்திய தீவுகளிற்கு செல்ல இருக்கிறது. அங்கு மேற்கிந்திய தீவுகள், அவுஸ்ரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் இடம்பிடிப்பார் என்று அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜோ பர்ன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தேசிய கிரிக்கட் மையத்தில் ஸ்டார்க் பந்து வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மிகவும் வேகமாக பந்து வீசிக்கொண்டிருக்கிறார். பந்தை மிகத் துல்லியமாக வீசுவதுடன், ஸ்விங்கும் செய்கிறார். அவருடைய பழைய திறமையை நெருங்கி வருகிறார் என்று நினைக்கிறேன்” என்றார். இதன்மூலம் ஸ்டார்க் மீண்டும் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்த வருகிறார்.

இன்னும் 6 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கட்டுக்களை வீழ்த்தினால், வேகமாக 100 விக்கட்டுக்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை மிட்சல் ஸ்டார்க் பெறுவார் என்பது ஒரு குறிப்படத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்