Friday 28 August 2015

நள்ளிரவில் வந்த செய்தி - கதை



இராமநாதனாலை வந்த வினை உது!

குணம், அதாரது இராமநாதன்?

நான் சேர். பொன். இராமநாதனைப் பற்றிச் சொல்லுறன் மரியதாஸ்.

அதுதான் ஆரெண்டு கேக்கிறன் குணம்? ஆரந்தச் சேறும் பொன்னும்?

உனக்கு ஜி.ஜி.யைத் தெரியும்தானே! ஐம்பதுக்கு ஐம்பது கேட்டவர். உனக்கு ஒரு இழவும் தெரியாது போல கிடக்கு. நான் போய் உன்னோடை அரசியல் கதைக்கிறன்.

குணம், எனக்கு இப்ப பென்ஷன் கிடைச்சா காணும் எண்ட மாதிரி. எத்தினை தரம் அலையுறது உவங்களிட்டை. எங்கட நாடு கனடாவை விட பரவாயில்லைப் போல கிடக்கு. கொஞ்சம் கையுக்கை வைச்சா வெண்டிடலாம். இஞ்சை அதுவும் சரி வராது.

மரியதாஸ், இப்பதான் நானும் வந்திருக்கிறேனே! இனி இரண்டு பேருமா அலைவம். அது சரி உந்தக் கொட்டாஞ்சேனைப் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலைக் கட்டினது ஆரெண்டு தெரியுமே? இராமநாதன்ரை அப்பா பொன்னம்பலம்.

குணம், எனக்கென்னண்டா அரசியல்வாதியளையே தெரியாது. நீ  நல்ல ஆழமா அரசியல் கதைக்கிறாய். ஃபமிலி றீ பற்றியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்.

xxx

குணம்! குணாம்!!

இரும் மரியதாஸ். உள்ளுக்கை போய் பென்ஷன் அலுவலை முடிச்சுக் கொண்டு வாறன்.

வட் இஸ் யுவர் ஃபாதர் நேம்? உன் அப்பா பேரு சொல்லு!

உம். வெள்ளையள் எல்லாம் இப்ப தமிழ் பேசப் பழகி பெரிய கலாட்டாவாக் கிடக்கு. கந்தவனம் சேர்.

மதர் நேம்? அம்ம பேர்?

முத்தம்மா சேர்.

அப்பா அப்பா பேரு?

முத்தையா.

அப்பா அம்மா பேரு?

முடிஞ்சுது போ!

முடிஞ்சுது? வட் முடிஞ்சுது? எனக்கு 'மேலே' 'கீழே' 'ஒண்ணு' 'ரண்ணு' 'சீட்டு' சொல்ல தெரியும். வட் முடிஞ்சுது?

தெரியாது சேர். ஐ டோன்ற் நோ சேர்.

அப்ப உனக்கு பென்ஷன் கிடையாது! யு டோன்ற் நோ யுவர் ஃபமிலி றீ?

எனக்கு ஒரு அக்கா இஞ்சை இருக்கிறா. அவவிட்டைக் கேட்டா எல்லாம் தெரியும். கான் ஐ யூஸ் யுவர் ரெலிபோன் சேர்?

யெஸ். யெஸ்.

றிங்கிங் நோ ஆன்சர் சேர்.

நெக்ஸ் ரைம் வரேக்கை எல்லாத்தையும் அறிஞ்சு கொண்டு வாங்க.


xxx

இந்த விடிய மூண்டு மணியிலை ஆர் ரெலிபோன் எடுக்கிறது? ஹலோ!

ஹலோ! ஹலோ!! அது நான் குணம். உன்ர அப்பா கதைக்கிறன்.

இப்ப அப்பா இஞ்சை விடிய நாலு மணி.

என்ன ஒஸ்ரேலியாவிலை இப்ப நாலு மணியோ? சரி சரி ஒரு பேப்பரும் பேனையும் எடு.

பொறுங்கோ வாறன்.

எடுத்திட்டியே! சரி, உன்ர அப்பா பேரென்ன சொல்லு?

உங்களுக்கென்ன அறளை பிடிச்சிட்டுதே அப்பா?

சரி சரி. உன்ர அப்பாவின்ர அப்பா பேரைச் சொல்லு?

அப்பாவின்ர அப்பா பேர் கந்தவனம், அம்மா பேர் முத்தம்மா.
உனக்கெல்லாம் 'பமிலி றீ' தெரியுது. நீ கெட்டிக்காரிதான். பேப்பரிலை அதை முதலிலை எழுது.

சரி எழுதிட்டன். எனக்குச் சரியா நித்திரை வருகுது அப்பா. கெதியிலை சொல்லுங்கோ?

அப்ப இனி அப்பாவின்ர அப்பாவின்ர அப்பா பேரைச் சொல்லு பாப்பம்.

எனக்கு அது தேவையில்லை. இரண்டு தலைமுறை தெரிஞ்சாப் போதும் அப்பா.

அப்ப என்னை அவங்கள் கேட்டான்களே! தெரியாட்டி பென்ஷன் இல்லையெண்டு சொல்லிப் போட்டான்கள்.

உங்களை அவங்கள் கேட்பான்கள்தானே! உங்களுக்கு அது இரண்டாம் தலைமுறை. எனக்கு அது மூண்டு. எல்லா அரசியல் தலைவர்மாரின்ரையும் பேரன் பாட்டன் பூட்டி எண்டு ஞாபகத்திலை வச்சிருங்கோ. உங்கடை அப்பாவின்ர அப்பா பெயர் உங்களுக்குத் தெரியேல்லை!

நீ என்ன விசர்க்கதை கதைக்கிறாய். நான் சொல்லுறன் பேப்பரிலை எழுது.

நான் எழுத மாட்டன். எனக்குத் தேவையில்லை அப்பா. என்ன சிரிக்கிறியள்? ஏன் அப்பா இப்ப கெக்கட்டம் போட்டுச் சிரிக்கிறியள்?

அப்ப, உனக்கும் இக்கணம் பென்ஷன் கிடையாது!




No comments:

Post a Comment