Friday 6 February 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-12)

உமது பெயரில், எனது கவிதை
ஒருமுறை அவுஸ்திரேலியாவில் வதியும் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிடும் முயற்சி நடைபெற்றது. கவிதைகளை தொகுப்பவருக்கு உதவியாக, கவிதைகளைச் சேர்த்துக் கொடுக்கும் பணியில் ஒருவர் இருந்தார். அவர் எனது கவிதை ஒன்றையும் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக ரெலிபோனில் சொன்னார். நான் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மரபுக்கவிதை சுட்டுப்போட்டாலும் வராது. அவர் கவிதை எழுதுவதில் அதீத ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்திலும் கவிதை எழுதுவார். அவரது தமிழ்க்கவிதைகளைக் காட்டிலும் ஆங்கிலக்கவிதைகள் பிரசித்தம்.

நான் கவிதை குடுக்கவில்லை. திடீரென ஒருநாள் அதிகாலையில் 'வணக்கம்' என்றபடி ரெலிபோன் செய்தார். என்னால் கவிதை தர முடியாதென்றால், எனக்குப் பதிலாக தான் எழுத முடியுமா என்று கேட்டார். அதாவது 'உமது பெயரில் எனது கவிதை' என்று சொல்லிச் சிரித்தார். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். கோபத்தில் அவர் ரெலிபோனை அடித்து வைத்துவிட்டார்.

92 பக்கங்கள் கொண்ட அந்தத்தொகுப்பில் அவரது கவிதை 11 பங்கங்களைப் பிடித்திருந்தது. மொத்தம் 31 கவிஞர்களின் படைப்புகள் அதில் வெளியாகியிருந்தன. எனது கவிதை ஒன்றும் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தது.

அந்தத் தொகுப்பைச் செய்தவர் கவிதைகள் எழுதுவதில்லை. தொகுப்பாளருக்கு உதவியாக இருந்தவருக்கு தன்னிடம் அந்தத் கவிதைத்தொகுப்பினைத் தொகுக்கும் பொறுப்பைத் தரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. "ஒரு கவிதை எழுதத் தெரியாதவருக்கெல்லாம் என்ன கண்டறியாத தொகுப்பு வேண்டிக் கிடக்கு" என்று சலித்துக் கொண்டார். தொகுப்பவருக்கு கட்டாயம் கவிதை எழுதத் தெரிந்திருக்க வேண்டுமா என்ன?

முகப்புத்தகத்தில் அவர் கணக்கு வைத்திருக்கின்றார் என அறிந்து, அவரது முகப்புத்தகத்தைப் பார்க்க விரும்பினேன். என்ன ஆச்சரியம்! அவர் என்னைத் தடை செய்து இருந்தார். நான் அறிந்து என்னைத் தடை செய்த முதல் ஆள் அவராகத்தான் இருக்க வேண்டும். ஆண்டவனே நல்லைக்குமரா ஏன் இந்தச் சோதனை?




No comments:

Post a Comment