உன் மடியில் வைத்த தலையில்மலைகளின் பின்னால் எழும்பிடும்சூரியக்கதிர்கள் பட்டே நான்முழித்திட்டேன்என் நெற்றி மீதேகுத்திட்ட வண்ணமாய் பதிருந்தஉன் அழகிய கண்பார்வை கண்டே அடைந்தேன்பரவசம்.என் நெற்றி மீதேறிதலை முடியிநூடு சென்றிடும்உன் மெல்லிய விரல்கள் தருமொருபரவசம்நாம் அமர்ந்திருக்கிறோம்உச்சி மலையில் சரிவொன்றில்சூரியோதயம் நோக்கிப் பார்த்தபடிஇருக்கும் ஒரு பெஞ்சில்உன் கண் பார்த்துநான் புன்னகைக்கும்தருணத்தில் ரசிக்கிறாய், குனிந்துதருகிறாய் முத்தம்உன் கழுத்தில் கை போட்டுஎன் முகம் பக்கம் உன் முகம்கொண்டு வந்தே தருகிறேன்பதில

இந்த டிசம்பர் 21இல் உலகம் அழியாவிட்டாலும், இது இன்னுமொரு Winter Solstice நாளாக இருக்கும். Winter Solstice என்பது நண்பகல் நேரத்தில் சூரியன் பூமியின் 0 பாகை அகலாங்கிலிருந்து மிகக் குறைந்த தூரத்திலிருக்கும் அகலாங்குக்கு மேலே வருதல். தெளிவான விளக்கத்துக்கு விக்கிப்பீடியா லிங்கை பார்க்கவும். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அதன் படி ஒரு வருடத்தின் நான்காவது நிகழ்வு டிசம்பர் 21 அல்லது 22 இல் வழக்கமாக வரும். இந்த முறை டிசம்பர் 21 இல் வருகிறது.சில கேள்விகள் நாசா விஞ்ஞானிகளிடம் ...

கணங்கள் நத்தைகளாய் நகரும்காத்திருத்தல் ரணங்களாய் வலிக்கும்தருணங்கள் தோன்றிடும் நேரங்களில்ஒலித்திடும் மனது, இது காதெலென...இனிமேலும் வராது என் வாழ்வில் நீ பள்ளிக்கூடம் வரா நேரங்கள்என்றெண்ணுவேன் ஒவ்வோர் இரவும்.தலை குனிந்து நிலம் பார்த்தேஎன் தெரு வழி கடந்திடும்உன் பாதங்களுக்காய் ஏங்கிநிற்கும் என் வாசல் படி.தோழிகள் புடை சூழநடந்தே செல்வாய் ஒரு ராணி போல...காதலால் நீ அழகாய் தோன்றிட்டாயாஇல்லை, உன் அழகால் காதல் வந்ததா...என் வாழ்வில் நீ இல்லை எனில்செத்துப்போவேன் என்றொரு பொய்நான் சொல்லமாட்டேன்நீ எனக்கு வேண்டும் என்றும்

மழைக்காலத்தில்ஜன்னலோரக் காப்பி,பஸ்சில் போகையில்கையிலொரு ஐஸ்க்ரீம்,என்றே கணங்களைரசிக்க வைத்தாய்...திறந்து பரந்திட்டபசும்புல் வெளியில்உன் இடக்கை - என்வலக்கை கோர்த்து,வானம் பார்த்துக்கிடந்திட்டோம்...பறந்து திரிந்தபட்டாம் பூச்சி பிடித்துஉன் மூக்கில் விட்டுஅதை போட்டோஎடுத்திட்டோம்...லெக்சர் பங்க் செய்துபார்த்த சினிமாவாகட்டும்,காதல் சீன்கள் போகையில்நீ விட்ட கூக்குரலாகட்டும்,பெப்பர்மின்ட் சாப்பிட்டுகுடித்த தண்ணீர் போல்ஒரு நினைவு...காலேஜ் டூர் சென்றுநீயும் நானும்நள்ளிரவில் அடித்த துண்டுபீடி...முதல் பப்'இலேயேஇருமி இர

சமீப காலமாக இணையத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் இந்த சோப்பா'வும் பைப்பா'வும். சோப்பா'வை தமிழில் "இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்" என மொழி பெயர்க்கின்றனர். இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் பேசப்பட்ட போது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அனைவரும் இதை ஒரு "காப்பிரைட்" போன்ற ஒரு சட்டமாகவே பார்த்தார்கள். கொஞ்ச நாட்களின் பின்னரான அலசலின் விளைவாகவே இது எல்லாவற்றையும் விட காரசாரமான ஒரு சட்டம் என்பது தெரிய வந்தது. விஷயம் காட்டுத்தீ போல பரவி இப்போது உலகெங்கும் அதை எதிர்த்துக் .

"நண்பன்" படத்தில் வரும் ஒரு அழகான பாடலின் அருமையான வரிகள் இவை. எனக்கு ரொம்பவே பிடித்துப் போனாதால் அதை இங்கே பகிர்கிறேன்.நல்ல நண்பன் வேண்டும் என்று,அந்த மரணமும் நினைக்கிறதா?சிறந்தவன் நீதான் என்று,உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா?இறைவனே, இறைவனே, இவனுயிர் வேண்டுமா?எங்கள் உயிர் எடுத்துக்கொள், உனக்கது போதுமா?இவன் எங்கள் ரோஜா செடி,அதை மரணம் தின்பதா?இவன் சிரித்து வீசும் ஒளி,அதை வேண்டினோம் மீண்டும் தா.உன் நினைவின் தாழ்வாரத்தில்,எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா?மனம் என்னும் மேம்பாலத்தில்,எங்கள் ஞாபகங்கள் பூக்கவி

பொதுவாவே ரீமேக்கும் படங்கள் அதீத எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். பெரும்பாலான ரீமேக்கிய படங்கள் ஒரிஜினல் படங்களின் நல்ல பெயரைக் கெடுத்த ஹிஸ்டரியே தமிழில் அதிகம். அதையும் மீறி, ஒரு ரீமேக்கிய படம் ஒரிஜினல் படத்தை விட நல்ல பெயர் வாங்குகிறது என்றால், ஒரே ஒரு காரணம்ஒரிஜினல் படம் அல்ட்ரா பிளாப் ஆக இருக்க வேண்டும். இந்த விதி எல்லாவற்றையும் மீறும் வரிசையும் ஒன்று இருக்கிறது. தரமான டைரக்டர் மற்றும் நடிகர் உடன் சிறந்த ஸ்க்ரீன் ப்ளே கலந்து செய்யும் படங்களுக்கான வரிசை. அதில் சமீபமாக வந்த ...

சில பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாமலேயே அதைக் கேட்டவுடனேயே, "அழகு" என்றுதான் இருக்க வேண்டும் என அடித்துக் கூறும் நாமங்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்த 'சிதாரா' இருந்து தொலைத்திருக்க வேண்டும். பேஸ்புக்கில் தொடக்கி ஸ்கைப்பில் கண்டினியூ ஆகும் நவீன காலக் காதல் காம லீலைகளில் ஒரு வர்க்கம் தேக்கி நிக்க, மற்றப் பிரிவு கடிதங்களில் இருந்து செல்போனுக்கு ட்ரான்ஸ்பர் வாங்கி இருந்தது. இந்தப் பிரிவில் வந்தவன்தான் 'அலன்'. தன் மொபைல் நம்பரில் ஒன்று இரண்டை மாற்றி வரும் நம்பருக்கு டயல் செய்யும் வித்தை ...

ஹேய் நீ...ஆமா உன்னைத்தான்...எப்படி இருக்கிறாய்? டூ யூ ரிமேம்பர் மீ? ஹிஹி... அதெப்படி மறந்துவிட முடியும்? நாம்தான் ஒருவரை ஒருவர் லவ் பண்ணித் தொலைத்தோமே. ஹேய் வெயிட். லவ்... பண்ணினோமா? பண்ணினேன். ரைட்? நான் மட்டும்தானே?நோ... நோ, நோ, நோ...அதெப்படியோ தெரியல? எல்லாப் பொண்ணுங்களாலயும் எப்பிடித்தான் முடியுதோ? ஒரு விஷயத்தை பண்ணிட்டு அது மாதிரி ஒண்ணு நடந்ததாவே காட்டிக்காம இருக்கறதுக்கு... ரீசனே இல்லாம சண்டை போடுறதுக்கு... நீங்களே தப்பு பண்ணினாலும் எங்களை மன்னிப்பு கேக்க வைப்பதற்கு... புரியல...பொண்ணுங்க மனசு ஆழம்னு ச

நீ உதிர்த்த புன்னகைகள்பனித்துளிகளாய்மனதை செய்திடும் ஈரம்உன் பார்வைகள்மின்னலென பாய்ந்துகுத்திக் கிழித்திடும்கிழிக்கப்பட்ட மனதின்சுவர்களின் வழியேவண்ணமயமாய் பறந்துஎன் முகம் மொய்க்கும்பட்டாம் பூச்சிகள்என் முகம் பார்த்து சிரித்துபின் வான் பார்த்துநீ கண் சிமிட்டும்கணத்தில் வந்துவிடுகிறது மழை.உன் அருகில்வரும் செக்கனில்எகிறுது ஹார்ட்பீட்,கையும் களவுமாய்பிடிபட்டாற் போல்வியர்க்குது குப்பென.கஞ்சா அடிக்காமலேயேவானில் பறக்கிறேன்உன் ஞாபகம் வருகையிலே.தண்ணி தெளிக்காமலேமப்பு கலைகிறதுஉனை நினைக்க மறக்கையிலேஎன்னோடு நீ பேசும்ஒவ்

ஊஞ்சலை ஆட்டிவிட்டால் கொஞ்ச நேரம் வேகமாக ஆடி, அதன் பின் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில், புவியீர்ப்பின் ஆர்முடுகலில் பிழைக்கத் தெரியாது ஓய்வுக்கு வரும். இடப்பட்ட நேரத்தில், யார் யாரோ வருவார், ஏறி அமர்வார். தம் விருப்பத்திற்கு ஏற்ப வேகமாய் ஆட்டுவார். விரும்பியவரை அருகில் ஏற்றிக் கொள்வார். முன்னோக்கியும், அகலவாக்கிலும் அமர்ந்து ஆடுவார். எது எப்படியோ யாரும் ஊஞ்சலில் நிரந்தரமில்லை. ஒரு கணத்தில் ஊஞ்சலும் நிரந்தரமில்லை. காலங்கள் வேகமாய் நகர என் கண் முன்னே நான் ஏறி, வேகமாய் ஆடி, அம்மாவைக் கூப்பிட்டு 'ப்ளைட் ...

'அன்-ப்ரடிக்டபிள்' என எல்லாராலும் வர்ணிக்கப்பட்டவர் செபஸ்டியன். பொதுவாவே அன்-ப்ரடிக்டபிள் என்ற பெயர் அதிகம் கோபம் வருபவர்களுக்கும் திடீர் என ஒரு விஷயத்தை செய்பவர்களுக்கும் சொல்லப்படுவதுண்டு, இவருக்கும் அதே. புரட்சிகரமான எழுத்தாளர் எல்லாம் கிடையாது. ஆனாலும் அவருக்கு மக்களிடம் ஒரு பயம் இருந்தது. ஊர்ப் பிரச்னையை 'நாடோடி' என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்கு கொண்டு வந்திட்டார். அதை தீர்ப்பதற்கான ஆக்ஷன்களை ஒரு சிலர்தான் எடுத்திட்டார்கள். இருந்தாலும் இவரது முயற்சிகேனும் இவருக்கு சுற்றும் ஒரு நல்ல பெயர் இருக்கவில்லை

புரட்சி, அது இதுன்னு எழுத எல்லாம், ஐ ஜஸ்ட் டோன்ட் நோ. கவிதைத்தனமாய் ஒரு ஹெடிங் வச்சிட்டு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிக்கிற கூட்டத்தில லைப் டைம் மெம்பர்ஷிப் வாங்கி வச்சிண்டு இருக்கேன்...லாஸ்ட் போஸ்ட்டை பத்தி பெர்சனல்'ஆ ஒரு கமன்ட் வந்திச்சு, 'வேஸ்ட் ஆப் டைம்'னு. எதைப் பத்தி எழுதறதுன்னு ஒரு வரையறை இருக்கா? தெரில. ஆனா, எல்லாத்தையும் எழுதிட முடியாதுதான். பார் எக்ஸாம்பிள், என் ப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான், 'எல்லார்க்கும் ப்ரைவேட் பார்ட்ஸ் இருக்கு. உனக்கு என்ன இருக்கும்னு எனக்கு தெரியும். எனக்கு ...

ரொம்ப காலத்துக்கு எழுதாமல் விட்டுவிட்டு அப்புறம், சாரி, பிசி, அது இது என்று பீலா விடுவது என் வழக்கமாகிவிட்டது. மெய்யாலுமே பிசி'தாம்ப்பா, நம்புப்பா என்று நானும் ரவுடிதாம்பா என்று நாய் சேகர் போல் புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவரவர்க்கு ஆயிரம் வேலை, அதில் உன் பொழைப்பு ஒரு கேடு என்று சிரிக்கும் ஊர்.9GAG என்று ஒரு தளம். பாழாய்ப்போன ஒரு தளம். கொஞ்ச நாள் அதில்தான் கிடந்து உருண்டேன். பேஸ்புக்கில் ப்ளேர்ட்டிங் பண்ணி மனம் நொந்து போவதை விட, எப்போதும் சிரித்து வாழலாம் ...

அங்கும் இங்கும் என பட்டுத் தெறித்துஉன் நாடு வகிடு வழியே வருகிறதுஉன் பின்னால் உதிக்கும் சூரியன்.அதன் முகம் உன் முதுகு காட்டிநிலம் பார்த்துப் புன்னகைத்துக்கோலம் போடும் உன் கைகளில்ஜொலிக்கும் தங்க வளையல்கள்.கோயில் மணியோசை போல் கேட்கும்தமக்கிடையே வளையல் போடும் சண்டை.உன் கை உதிரும் கோலப்பொடிநிலத்தில் விழுந்து உனை வாழ்த்தும்.எல்லா விடியலிலும் முதல் பக்கத்தில்அச்சிடப்படும் உன் முகம்... ...

இது கார்ட்ஸ் விளையாட்டுக்களில் ஒன்றான '304' என்று எங்கள் வட்டாரத்தில் பிரபல்யமான விளையாட்டை ப்ரோமொட் செய்யும் நோக்கில் எழுதப்படுகிறது. நான்கு அல்லது ஆறு பேராக விளையாடப்படும் இந்த விளையாட்டின் நான்கு பேர் விளையாட்டு பற்றி இப்பதிவு...பாயின்ட் விபரம்:J = 39 = 2A = 1.110 = 1K = 0.3Q = 0.28 = 0 (பெரியது)7 = 0 (சிறியது)பெயர்க்காரணம்: இவ்வாறு 8x4 இனம்=32 கார்ட்டுக்கும் பாயிண்ட்ஸ் கூட்டும் போது 30.4 வரும்.விளையாட்டு முறை:1. மேலே பாயிண்ட்ஸ் தரப்பட்ட கார்டுகளை தவிர ...

மின்னற் பொழுதே தூரம்... நின் கண் இமைத்தலே நேரம்... கணத்தில் தோன்றிடுமே காதல்...ஏன் வந்ததென்று தேடித் தேடி ஒரு 'வைல் லூப்'பில் ஓடிடும் மனது...சரிவான வீதியின் உயரத்தில் நீ...உன் பின்னே கதிர் பரப்பும் சூரியன்...நின் நிழல் என் முகம் விழசுண்டப்படும் என் மனது...ஜாக்கிங் செய்யும் வேளைகள்...காலை அரும்பிய நுனி இலை பனித்துளிகள்...மூக்கினால் சுண்டி சிரிக்கிறாய்...'இன்க்ரிடிபல் ஹல்க்' தூக்கி எறிந்தது போல பறந்து போகிறது மனது...உன் கைகளில் மட்டும் பட்டாம்பூச்சி உறங்கும் மர்மம்...உன் கைகளின் வாசமா இல்லை உன் விரல்களின் மென

அது ஒரு சாக்கடை என்பர்,போக வேண்டாம் என்பர், இல்லாமல் இருக்க முடியாதுஎன்றே நினைத்தும் கொள்வர் பேச்செடுத்தாலே பச்சோந்தியாக்கும்,உமை இரு வேறு கதைபேசவைத்தே அழிக்கும்,சத்தானியத்தின் மறுபிறவி.அது ஒரு அழகாய் இருந்தது ஒருக் கால்.குணம் மாறிப் போனது ரத்தவெறி மனிதர்களால்.மாமன் மச்சான் பங்காளி உறவு,பெட்டி படுக்கை எடுத்தே ஊர் விட்டு ஓடிப் போகும்.அரசியலில் வன்முறை கூடாது என்றதொரு கூட்டம்.அரசில்யலை விட வேறென்ன வன்முறை என்றது மற்றக் கூட்டம்.அவசர அவசரமாய் காசு பணம் சேர்க்கும் ஊடகமாய் மாறிப் போனது, தான் உருவான நோக்கம் இழந்து

அழகிய நாளொன்றில்உதித்தது அவ்வுறவுஉன் சோகங்கள் துரத்த வந்த சந்தோஷம் என்றுரைத்தது உன் உதடுஅனுபவம் தந்த துக்கம்அழிக்க வந்ததொரு தென்றல் நீயேதான் என்றபடிஉலகம் கேட்க நான் சத்தமிட்ட எதிரொலி மீண்டும் என் காது நோக்கிவந்து சேர்ந்தது நேற்றுஒரு மின்னற்பொழுதே காலம் நம் நட்போ, அதன் மேலான காதலோநிலைத்தது எனினும்அதில் உண்டான மொட்டுக்கள்பூக்ககும் நேரம் இது எனத் தெரியாமல் அழிக்க நேர்ந்தது ஏனோ?என்னால் வந்த உறவு எனக்கே துயரம் தர முனைந்தது எப்படியோ?நீ கூறாமல் நின்றாய்ஒரு ஓரத்தில் வானை நோக்கியே வாழ்க்கை ஒரு புதிர்விடை தெரியாக் கே

ஒரு காபி ஷாப். கொஞ்சம் பரந்து விரிந்த ஒரு காபி ஷாப். தெருவை நோக்கிய பக்கமாய் கண்ணாடியாலானா திரை. முழுக்க ஏ.சி செய்யப்பட்ட அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடித் திரை அருகில் தெருவை ரசிக்கும் முகமாய் மேஜைகளும் உண்டு. அவ்வாறான ஒரு மேஜை காபி ஷாப்பின் ஒரு கோர்னரில் இருக்கும். ஒரு பக்கம் கண்ணாடித் திரை. அது நைண்டி டிகிரி எடுத்து திரும்ப, வரும் பக்கம் பக்கத்துக் கடைக்கும் காபி ஷாப்புக்கும் இடையேயான பொதுச் சுவர். அந்த மூலை மேஜையில் சுவர்ப் பக்கம் முதுகைக் ...

Previous Page