48 போட்டிகள், 42 நாட்கள்.. என்ன வேகமாக ஓடி முடிந்திருக்கின்றன.. எப்போது ஆரம்பிக்கும் என்று பார்த்துக் காத்து, பின்னர் ஒவ்வொரு போட்டியாக பார்த்து பார்த்து, திடீரென பார்த்தால், நாளை உலகக்கிண்ண இறுதிப்போட்டி. இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய, மற்ற அணிகளை விட சமபலமும் கொண்ட இரண்டு அணிகள், அதிலும் பக்கத்து பக்கத்து நாடுகள், போட்டிகளை நடத்துகின்ற இரண்டு அணிகளும் இறுதிப் ...

இரண்டு நாட்களாக இணையவெளி இனிய கலாய்த்தல் களமாக, சில இடங்களில் இரத்தம் தெறிக்காத குறையாக நடந்த வார்த்தையாடல்கள், troll ஓடல்களுக்கு வழிவகுத்த போட்டி பற்றி விரிவாக, சொல்ல வேண்டிய விடயங்களை அழுத்தமாகச் சொல்ல நேரம் இன்று தான் வாய்த்தது. இந்த troll கள் எல்லாம் ஏன் இம்முறை இவ்வளவு 'ரத்த வெறியோடு'  இடம்பெற்றன, இடம்பெறுகின்றன என்று எனது Facebookஇலும், twitterஇலும் விளக்கமாகவே சொல்லி விட்டேன், இன்னும் ...

அனல் பறக்கவுள்ள அவுஸ்திரேலியா - இந்தியா அரையிறுதி என்ற தலைப்பில் இன்று ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு ஒரு கட்டுரையை விளையாட்டு விமர்சகனாக எழுதியிருந்தேன். அதிலிருந்து சில, பல மாற்றங்கள் மற்றும் புதிய சேர்க்கைகள், தனிப்பட்ட கருத்துக்களுடன் எனது வலைப்பதிவாக... "சிட்னி அரையிறுதி - சூடு பறக்கவுள்ள அவுஸ்திரேலிய - இந்திய மோதல் #cwc15" -  ​ A.R.V.லோஷன் இரண்டு தரம் உலகக்கிண்ணம் வென்றுள்ள தற்போதைய ...

அற்புதமான முதலாவது அரையிறுதி  என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு நேற்று எழுதிய முதலாவது அரையிறுதி பற்றிய விரிவான அலசலை இன்னும் சில புதிய சேர்ப்புக்கள், இன்றுவரை கிடைத்துள்ள புதிய தகவல்கள், சுவாரஸ்யமான புகைப்படங்களுடன் இங்கே 'புதிதாக' பதிகிறேன். படம் நன்றி - Cricket  Tracker  ----------------------------------- என்னா ஒரு போட்டி !!! வெற்றி - தோல்வி, அளவு கடந்த ஆனந்தம் - அடக்க ...

முதலாவது அரையிறுதி - நியூ சீலாந்து எதிர் தென் ஆபிரிக்கா  என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையினை சிற்சில புதிய சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்... எழுதும் நேரம் 24ஆம் திகதி செவ்வாய் அதிகாலை ஆகியிருப்பதால், இன்று, நாளை குழப்பத்தைத் தவிர்க்குகக.. --------------------- உலகக்கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி.. நியூ சீலாந்து, தென் ஆபிரிக்கா இந்த இரு அணிகளும் ...

ஆதிக்கம் செலுத்தி அரையிறுதி வாய்ப்புப் பெற்ற நான்கு அணிகள் - உலகக்கிண்ணம் 2015 என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்காக எழுதிய காலிறுதிப் போட்டிகள் பற்றிய அலசலை மேலும் சில சிறப்புத் தகவல்கள், இணைப்புக்கள் + புகைப்படங்களுடன் இங்கே பதிகிறேன். ------------------- நாளைய முதலாவது அரையிறுதிப் போட்டி பற்றிய பதிவையும் இன்னும் சில நிமிடங்களில் எதிர்பார்க்கலாம். ---------------------- மூன்றே ...

இலங்கை அணி காலிறுதியில் தோற்று வெளியேற, தென் ஆபிரிக்கா 23 ஆண்டுகளாக இருந்த knock out தோல்வி சாபத்திலிருந்து மீண்டு அரையிறுதிக்கு மிக உற்சாகமாக செல்கிறது. தென் ஆபிரிக்காவின் knock out சுற்று சாபம் அரையிறுதியில் எங்கே ஆரம்பித்ததோ அங்கே, அதே சிட்னியிலேயே இன்றைய தினம் இலங்கை அணிக்கு எதிராகப் பெற்ற அபாரமான வெற்றியுடன் முடிந்தது குறிப்பிடக்கூடிய ஒரு முக்கியமான விடயமாகும். 1992இல் மிகக் கொடுமையாகத் ...

உலகக்கிண்ணம் 2015: எட்டு அணிகள் முட்டி மோதும் காலிறுதிகள் என்ற தலைப்பில் இன்று ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையை மேலதிக விஷயங்கள், தகவல்களுடன் இங்கே பதிகிறேன். உலகக்கிண்ணத்தின் 42 போட்டிகள் முடிந்து 6 அணிகள் வெளியேற, இதுவரை சிறப்பாக விளையாடியுள்ள 8 அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன. முதல் சுற்றின் இறுதிப் போட்டி வரை இறுதியாகத் தெரிவாகும் அணிகளில் சஸ்பென்ஸ் ...

'​சாதனைகளின் புதிய பெயர் சங்கா' என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டன் இணையத்துக்கு எழுதிய கட்டுரையை இன்னும் கொஞ்சம் புதிய மேலதிக சேர்க்கைகளுடன் இங்கே தருகிறேன். --------------------- நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம் சங்கா கிண்ணம் என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம். கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் ...

உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு ஓய்வு நாளான நேற்று இந்த உலகக்கிண்ணம் ஆரம்பித்து 15 நாட்கள் பூர்த்தியானதுடன், சாதனைகள், தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களுடன் ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு நேற்று எழுதிய கட்டுரை.. சில மாற்றங்கள், சில சேர்க்கைகளுடன் இங்கே எனது பக்கத்தில் தரலாம் என்று பார்த்தால் 'நிறைய' மாற்றங்களை இன்றைய அயர்லாந்துடனான போட்டியில் தென் ஆபிரிக்க அதிரடி மன்னர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். எனவே 'சில' ...

உலகக்கிண்ணப் போட்டிகளின் முதல் பத்து நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளன. 15 போட்டிகளின் முடிவில், கிறிஸ் கெயில் சிக்ஸர் மழை பொழிந்து ஓட்டங்களை மலையாகக் குவித்து சாதனைகளை உடைத்து பெற்ற 215 ஓட்டங்கள் இந்த உலகக்கிண்ணத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. ஒரே இரட்டைச் சதம், ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளது. உலகக்கிண்ணத்தின் அதிகூடிய தனி நபர் ஓட்ட எண்ணிக்கை. முன்னைய கரி கேர்ஸ்டனின் 188 ஓட்டங்களை ...

B பிரிவுகளின் அணிகளின் அலசலாக ஸ்ரீலங்கா விஸ்டனுக்கு எழுதிய கட்டுரையுடன், மேலதிகமாக சில விடயங்களை சேர்த்து இடும் பதிவு இது. உலகக்கிண்ணத்தில் நான்கு நாட்கள் முடிந்திருக்கின்றன. 6 போட்டிகள் - நியூசீலாந்து மட்டுமே இரு போட்டிகளை விளையாடியிருக்கின்றது. ஒரு டெஸ்ட் விளையாடும் அணி, டெஸ்ட் அந்தஸ்தில்லாத சிறிய அணியிடம் தோல்வியுற்ற அதிர்ச்சி முடிவு. அதுவும் 300க்கு மேற்பட்ட ஓட்ட இலக்கைத் துரத்தி ...

11வது உலகக்கிண்ணம்... உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை  என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன் இங்கே பதிகிறேன்... சில எதிர்வுகூறல்கள், உலகக்கிண்ணம் பற்றி முன்னரே நான் Twitter, Facebook மூலமாகச் சொல்லியிருந்த விடயங்களையும் இங்கே சேர்த்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களாகத் தெரிவியுங்கள். அவை என்னுடைய ...

இலங்கைக்கு இதுவரை சொந்தமாகவுள்ள ஒரே உலகக்கிண்ணம் பற்றிய நினைவுகளை ஸ்ரீலங்கா விஸ்டனில் மீட்ட கட்டுரையின் இரண்டாவது பகுதி இது... ------------------ 1996 உலகக்கிண்ணம் பற்றி நினைவுகளை மீட்கும்போது, ஏராளமான மறக்க முடியாத நினைவுகள் வரும். முக்கியமாக இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றிப்போட்ட ஒரு மைல் கல் தொடர் இது. கிரிக்கெட்டையும் மாற்றிப்போட்டது என்று சொல்லலாம். முக்கியமாக ஆசிய அணிகள், ...

உலகக்கிண்ண நினைவுகளைப் பகிர்கிற நேரம், இரண்டு உலகக்கிண்ணங்கள் பற்றி மட்டும் நீண்ட, நினைவுகள் இருக்கு. 1996 & 2011. இரண்டும் இலங்கையில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிகள். இலங்கை வென்றது ஒன்று, வெல்வதற்குக் கிட்ட வந்து இன்றும் மனம் கொள்ளா சோகம் தரும் 2011 மற்றது. 1996ஆம் ஆண்டின் உலகக்கிண்ணத்தின் பெருமித நினைவுகளைப் பகிர்ந்த தமிழ் விஸ்டன் கட்டுரை இது. 1996 !!! எந்தவொரு இலங்கை ...

1992 உலகக்கிண்ணம் தான் நான் 'பார்த்த' முதலாவது உலகக்கிண்ணம். பார்த்தேன் என்பதை விட பரவசப்பட்ட என்று சொல்வதே மேலும் பொருத்தமானது. இன்று வரை ஏனைய எல்லா உலகக்கிண்ணங்களையும் விட 92 உலகக்கிண்ணம் தான் மிகவும் புதுமையானதும், நேர்த்தியானதும், வண்ணமயமானதும் என்பேன். வர்ண சீருடைகளின் அணி வகுப்பு, எல்லா அணிகளையும் ஒரு சேரப் பார்த்தது, இதுவரை பார்த்திராத அதிரடி துடுப்பாட்டங்கள் என்று அந்த ...

இதுவரை நடைபெற்ற 10 உலகக்கிண்ணங்களில் நான் பார்த்த, அனுபவரீதியாக கேட்டு, அறிந்த உலகக்கிண்ணத் தொடர்கள் பற்றி நான் தமிழ் விஸ்டன் இணையத்துக்காக எழுதும் தொடர் கட்டுரையின் முதல் பாகம்... ---------------- உலகக்கிண்ணங்கள் என்றவுடனேயே முன்னோட்டங்கள், ஊகங்கள் எப்படியும் எழுதுவதுண்டு. தமிழ் விஸ்டனில் கொஞ்சம் வித்தியாசமாக இம்முறை முயலலாம் என்று எண்ணியபோது ஊக்கம் தந்த நண்பர் - தமிழ் விஸ்டன் ஆசிரியர் ...

இந்த ஒரேயொரு நாளுக்காக நாட்டை ஆளும் ராஜாக்களும் தேடி வந்து​ எம் காலில் விழக்கூடத் தயாராக இருப்பார்கள். எல்லாம் எங்கள் கைகளால் இடப்போகும் அந்தப் புள்ளடி அவர்களுக்குத் தரப்போகும் நாடாளும் ஆணை. https://www.facebook.com/CPASL ஒவ்வொரு வாக்காக தேடும் ஒவ்வொரு தரப்பும், இலங்கையின் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இரு தரப்பும் காலில் விழாக்குறையாக கைகளைக் கூப்பித் தொழுது ...

உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னும் 6 வாரங்கள்.. அல்லது மேலும் சரியாக சொல்வதாக இருந்தால் 41 நாட்கள். இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடவுள்ள 14 அணிகளில் இதுவரை ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அணிகளை அறிவித்துள்ளன. இரு பிரிவுகள், தலா ஏழு அணிகள்.. எல்லா அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணிகளை எதிர்வரும் 7ஆம் ...

தமிழ் விஸ்டனுக்கான நேற்றைய எனது அலசலில், இரண்டு போட்டிகள் இன்று தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைக்கேற்ற மாற்றங்கள், மேலும் சில புதிய குறிப்புக்களுடன் இந்த இடுகை.. ----------------------------- நத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் ...

Previous Page